தூத்துக்குடி மாவட்டம், பிப்.29, கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், SALZER ELECTRONICS LTD COMPANY கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது.
இந்த இன்டர்வியூவில் செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியின், மின்னியல் துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் சரவணன், வெங்கடேஷ் பிரசாத், நாகமணி, தினேஷ், கௌரிசங்கர், சுந்தரபாண்டி, மற்றும் மின்னணுவியல் துறையைச் சார்ந்த மூன்றாமாண்டு பயின்று வரும் மாணவர் சுபையர் கான் ஆகிய ஏழு பேர் பணி நியமன ஆணை பெற்று கொண்டனர்.
மேற்படி மாணவர்களை, கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர்கள், ஆசிரிய பெருமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக