நாசரேத் - சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படும் வாயிற் படிக்கட்டுகள் - நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

நாசரேத் - சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படும் வாயிற் படிக்கட்டுகள் - நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

 நாசரேத், மர்காசியஸ் சாலையில், புதிய கடை கட்டுமானம் நடந்து வருகிறது, அந்த கடையின் முன்புறம் சாலையையும், கழிவுநீர் ஓடையையும் ஆக்கிரமித்து சுமார் 1½ உயரம் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள்.


இதனால் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீர், வடிகாலுக்கு செல்லாமல் சாலையிலேயே தேங்கி நின்றால் பெரும் சிரமம் ஏற்படும்.


மேலும் நாசரேத் கடை வீதிகளில் பல இடங்களில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது, ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் எதிர் எதிர் திசையில் செல்வது, சற்று கடினமாக உள்ளது. 


இந்நிலையில் எதிர்வரும் வாகனங்கள் சில இடங்களில் நின்று  தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, அப்படி நின்று செல்லும்போது பின்வரும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.


எனவே இது போன்று சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும், கட்டிடங்களால் மேலும் சாலை குறுகி விடும். போக்குவரத்து நெருக்கடி இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோல சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு இடத்தில் கடைக்கு வெளியே படிக்கட்டுகள் கட்டப்பட்டு, பின்பு பேரூராட்சி நிர்வாகத்தால் சரி செய்ய வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad