கச்சனாவிளை - உடைந்த படித்துறை படிக்கட்டுகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

கச்சனாவிளை - உடைந்த படித்துறை படிக்கட்டுகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள்.

தூத்துக்குடி மாவட்டம், பிப் 29, ஏரல் வட்டம், கச்சனாவிளை, வாய்க்காலில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட படித்துறை, சீரமைத்த தர மாவட்ட ஆட்சியருக்கு வடலிவிளை, கச்சனாவிளை பொதுமக்கள் மற்றும் இந்து மகா சபா சார்பில் வேண்டுகோள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கனமழையின் காரணமாக பெரு வள்ளம் ஏற்பட்டது. அப்போது கச்சனாவிளை
கிராமத்தில் வாய்க்கால் கரைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டது, மேலும் மக்கள் இறங்கி குளிக்க வசதியாக படித்துறை கட்டப்பட்டிருந்தது. 


அந்த படித்துறையின் அஸ்திவாரங்கள் கனமழையில் அடித்துச் செல்லப்பட்டதால் படித்துறைக்கு சென்று பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.


எனவே பாதிக்கப்பட்ட வடலிவிளை, கச்சனாவிளை  பொதுமக்கள், இந்து மகா சபா - வினருடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில்.


அனுப்புநர்

இந்து மகாசபா
மற்றும் வடலிவிளை பொதுமக்கள் கச்சனாவிளை கிராமம்

பெறுநர்

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம்

ஐயா வணக்கம்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா கச்சனாவிளை ஊராட்சிக்கு உட்பட்ட வடலிவிளை பகுதியில் கடம்பாக்குளம் கரையில் படித்துறை உள்ளது கடந்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில்  படித்துறையின் அஸ்த்திவாரம்  அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய குழி விழுந்துள்ளது எந்த நேரத்திலும் மக்கள் உயிருக்கு இது ஆபத்தாக அமையும் ஆகையால் அதற்குள்ளாக மக்கள் குளிக்கும் படித்துறையை சரி செய்து தருமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad