ஏரல் - இரட்டைத் திருப்பதியில் சாத்து முறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 மார்ச், 2024

ஏரல் - இரட்டைத் திருப்பதியில் சாத்து முறை.

ஸ்ரீவைகுண்டம் மார்ச். 5              நவதிருப்பதி கோவில்களில் 5 வது திருப்தியான இரட்டை திருப்பதியில் நேற்று  முன்தினம் சாத்து முறை நடைபெற்றது. 


பெருமாள் கோயில்களில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முன் பகல் பத்து பின்னர் இராப் பத்து திருவிழா நடப்பது வழக்கம். 


இராப் பத்து 12 ம் நாளில் ஆழ்வார் சாத்து முறை நடைபெறும். நவதிருப்பதி கோயில்களில் மார்கழி மாதம் சாத்து முறை நிறைவுபெற்றது. ஆனால் இரட்டைதிருப்பதியில் மட்டும் நடைபெறவில்லை. 


முன் காலங்களில் ஆழ்வார்திருநகரி  சுவாமி நம்மாழ்வார் மார்கழி மாதம் அத்யயன உற்சவம் ஆரம்பிக்கும் போது இங்கிருந்து பல்லக்கில் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சுவாமி ரங்கநாதருடன் உற்சவம் முடிந்து மாசி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று தந்தை தாய் என்று அழைத்த இரட்டை திருப்பதி சுவாமி தேவர்பிரான் கோவிலுக்கு வந்தபின் சாத்து முறை நடைபெறும். 


அந்த வழக்கத்தில் இரட்டை திருப்பதியில் நேற்று முன்தினம் சாத்து முறை நடந்தது. ஆழ்வார்திருநகரி  சுவாமி நம்மாழ்வார்க்கு காலை 4 மணிக்கு விஸ்வரூபம் 4.30 மணிக்கு திருமஞ்சனம் 5 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி, பின்னர் 7 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு 8 மணிக்கு அப்பன் கோவில் விடாயத்து, 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு இரட்டை திருப்பதியில் அரவிந்தலோசனர் கோயிலில் விடாயத்து பின்னர் 9.30 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு இரட்டை திருப்பதியில் தேவர்பிரான் கோவிலுக்கு வந்தடைந்தார். 


3 மணிக்கு முன் மண்டப குறட்டில் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை. திருவாய்மொழி100 பாசுரங்கள் சேவித்து சுவாமி தேவர்பிரான்  சுவாமி நம்மாழ்வார் இருவருக்கும் அர்ச்சகர்கள் கண்ணன் விவேகானந்தன் பாலாஜி ரகு சுந்தரராஜன் ஆகியோர்  சாத்து முறை நடத்தினர்.


6.30 மணிக்கு சாத்து முறை துளசி தீர்த்தம் சடாரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை7.30 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பல்லக்கில் ஆழ்வார்திருநகரி புறப்பட்டார். சுவாமி தேவர்பிரான் சுவாமி நம்மாழ்வார் சென்றபின் பிரிவாற்றலால் சோகத்துடன் கோயிலுக்குள் எழுந்தருளினார், சுவாமி நம்மாழ்வார்  இரவு 8.30 மணிக்கு தன் இருப்பிடம் வந்தார். 


இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் செயல் அதிகாரி தமிழ்ச்செல்வி, ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜன் என்ற கணேசன் மற்றும் உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி, காளிமுத்து, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி  இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை கள இயக்குனர் விஜயகுமார் சூப்பர்வைசர்கள்  வரதராஜபத்மநாபன்,  பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad