தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மார்ச் 5. ஸ்ரீவைகுண்டம் சார்நிலை கருவூலத்தில் புதிய உதவி கருவூல அலுவலர் பொறுப்பேற்றார்.
கடந்த சில மாதங்களாக உதவி கூடுதல் அலுவலர் சிவனுப்பாண்டியன் கூடுதலாக உதவி அலுவலர் பொறுப்பு வகித்தார்.
தற்போது புதிய உதவி அலுவலர் சங்கர் நேற்று முன் தினம் பொறுப்பு ஏற்றார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி பொன்னாடை அணவித்து வரவேற்றார்.
பொருளாளர் சீனிப்பாண்டியன், முன்னாள் செயலாளர் ராஜதேவமித்ரன் குருசாமி, பெருமாள் மற்றும் உதவி கூடுதல் கருவூல அலுவலர் சிவனுப்பாண்டியன் கணக்கர்கள் முகமது இர்ஷாத், ஞானப்பழம், சில்வியா, உதவியாளர் வைதேகி ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக