தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.04, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் மெகா மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாரத்தான் போட்டி ஏற்பாட்டை அமைச்சர் அனிதா R. ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். மாரத்தான் போட்டியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட துணை செயலாளரும் (பொது), ஜெயராஜ் அன்ன பாக்கியம் பொறியியல் கல்லூரியின் தாளாளருமான ஜெயகுமார் ரூபன் வழிகாட்டுதலின் படி, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் CSI பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்று கொண்டனர்.
சான்றிதழையும், பரிசுகளையும் பெற்றுக் கொண்ட ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியரை கல்லூரியின் முதல்வர் ஜெயகுமார், நிர்வாக துறை அலுவலர் மற்றும் எஸ் & Science & Humanities துறை தலைவர் வினோதா, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், கல்லூரியின் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், மற்றும் பேராசிரியர்கள் பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக