கோவில்பட்டி - பைக் விபத்து, லாரி உரிமையாளர் உயிரிழந்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மார்ச், 2024

கோவில்பட்டி - பைக் விபத்து, லாரி உரிமையாளர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 23, கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். 


இன்று காலையில் செல்வகுமார் தனது இருசக்கர வாகனத்தில் ஊரிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்துள்ளார். வெங்கடாசலபுரம் விலக்கு அருகே வந்தபோது, கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சிமெண்ட் மூடைகளை ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி அவரது பைக் மீது மோதியது.


இதில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/