தூத்துக்குடி - மக்களவைத் தேர்தலுக்கான (Random)சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் தேர்வு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மார்ச், 2024

தூத்துக்குடி - மக்களவைத் தேர்தலுக்கான (Random)சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி, மார்ச் 23, தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு (Random)சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் இயந்திரங்களை தேர்வு செய்யும் முதற்கட்ட பணி இன்று தொடங்கியது. பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (23.03.2024) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் இயந்திரங்களை தேர்வு செய்யும் முதற்கட்ட பணி தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ப.ராஜகுரு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/