சிலம்பாட்டக் கலைஞர், “ கலை வளர்மணி” பட்டத்தை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

சிலம்பாட்டக் கலைஞர், “ கலை வளர்மணி” பட்டத்தை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 12,
சிறந்த சிலம்பாட்டக் கலைஞர், " கலை வளர்மணி" பட்டத்தை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த சிலம்பாட்டக் கலைஞர் மற்றும் சிறப்பு விருதுக்குரிய " கலை வளர்மணி " என்ற பட்டத்தையும் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பப் பள்ளி  சிலம்பம் மற்றும் கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் விருது வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் மற்றும் பணமுடிப்பு போன்றவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Sent from my iPhone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/