திருநெல்வேலி - போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

திருநெல்வேலி - போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை.

திருநெல்வேலி மாவட்டம், மார்ச் 07, திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை போலீசார் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தும் பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதித்தனர்.


ஏற்கனவே, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஒலி மாசு படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 


அப்போது ஒரு சில பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த ஒலிப்பான்களை பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதித்து மேற்படி ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/