தூத்துக்குடி - முதற்கட்ட Randomization ஆனது மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

தூத்துக்குடி - முதற்கட்ட Randomization ஆனது மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்
36.தூத்துக்குடி பாராளுமன்ற  மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024ஐ முன்னிட்டு,
தேர்தல் பணியில் (வாக்குச்சாவடி மையத்தில்) ஈடுபடவுள்ள பணியாளர்களை Random முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட Randomization ஆனது  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 


பாராளுமன்ற  மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இன்று (21.03.2024), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேர்தல் பணியில் (வாக்குச்சாவடி மையத்தில்) ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையிலும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தேர்தல் பணியில் (வாக்குச்சாவடி மையத்தில்) ஈடுபடவுள்ள பணியாளர்களை RANDOM முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட Randomization ஆனது  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து, தொகுதி எண் 36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வருகின்ற 23.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 09.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. 

அதாவது, 213.விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் எட்டையபுரம், குமாரகிரி CKT மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், 

214.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும், 

215.திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டியன்பட்டிணம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 

216.ஸ்ரீவைகுண்டம்  சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீவைகுண்டம் KGS மேல்நிலைப்பள்ளியிலும்,  

217.ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூர் ஜாண் டி பாப்பிஸ்ட் மேல்நிலைப்பள்ளியிலும், 

218. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 


மேற்படி தேர்தலில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை Random முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட Randomization ஆனது இன்று நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துப் பணியாளர்களும் பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்தும், பிற பணிகள் குறித்தும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். 


வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்க வருகை தரும் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி மையத்தில் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 


     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/