தூத்துக்குடி - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய பயிற்சி வகுப்புகள் 16.04.2024 அன்று நடைபெறும் என ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தூத்துக்குடி - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய பயிற்சி வகுப்புகள் 16.04.2024 அன்று நடைபெறும் என ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 13,
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய பயிற்சி வகுப்புகள் சட்டமன்றத் தொகுதி வாரியாக எதிர்வரும் 16.04.2024 அன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தகவல்


36. தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய பயிற்சி வகுப்புகள் சட்டமன்றத் தொகுதி வாரியாக எதிர்வரும் 16.04.2024 அன்று (செவ்வாய்கிழமை) பின்வரும் இடங்களில் காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது. 

அதன் படி சட்டமன்ற தொகுதி
பயிற்சி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

213.விளாத்திகுளம்
சி.டி.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, குமாரகிரி, எட்டையபுரம்

214.தூத்துக்குடி
காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி

215.திருச்செந்தூர்
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டியன்பட்டிணம்.

216.ஸ்ரீவைகுண்டம்
கே.ஜி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம்

217.ஓட்டப்பிடாரம்
ஜான் தி பாப்டிஸ்ட் மேனிலைப்பள்ளி, புதியம்புத்தூர்

218. கோவில்பட்டி
நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி


இந்தப் பயிற்சி மையங்களில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவதற்கும் / வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை அங்கேயே மீண்டும் செலுத்துவதற்கும் ஏதுவாக மேற்படி பயிற்சி மையங்களில் சிறப்பு வசதி மையம் (Facilitation Centre) அமைக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு வசதி மையங்களில் தபால் வாக்குகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில் உரிய காவல் பாதுகாப்புடன், வேட்பாளர் / பிரதிநிதிகளின் முன்னிலையில் பெறப்பட உள்ளது. 


எனவே, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் 16.04.2024 அன்று பயிற்சி நடைபெறும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையங்களில் தபால் வாக்குகளை செலுத்திடுமாறு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/