கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து வள்ளியூர் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஏப்ரல், 2024

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து வள்ளியூர் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.

திருநெல்வேலி மாவட்டம், ஏப்ரல் 10, வள்ளியூரில் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி Dr. ரமனி (45). இருவரும்  இன்று காலை அவர்களது உறவினர் சேர்மதாய் (70) ஆகிய மூவரும் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை ரவீந்திரன் ஒட்டியுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவிந்திரன், மருத்துவர்கள் இருவர் உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad