கிண்டியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு சார்பில் கருப்பு சட்டை போராட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஏப்ரல், 2024

கிண்டியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு சார்பில் கருப்பு சட்டை போராட்டம்


முன்னாள் முதலமைச்சர் கருணாநியால் வழங்கப்பட்ட பதவிகளையும் உரிமைகளையும் பறிக்க சட்டத்திற்கும் உண்மைக்கும் புறம்பான தகவல்களை அரசிற்கு பரிந்துரைத்து அமைச்சுப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் போக்குவரத்து ஆணையரின் நியாயமற்ற செயலை கண்டித்தும் ஏற்கனவே திமுக அரசால் வழங்கப்பட்ட பதவிகளையும் உரிமைகளையும் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் மறு பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தொழில் நுட்பம் மற்ற பணியாளர்கள் 75 சதவீதமும் தொழில் நுட்ப பணியாளர்கள் 25 சதவீதமும் இருந்து வருகின்றார்கள்.



இதில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சாதகமாகவும் தொழில்நுட்பமற்ற அமைச்சு பணியாளர்களுக்கு பாதகமாகவும் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப அதிகாரியுடன் கைகோர்த்துள்ள போக்குவரத்து ஆணையரின் செயல்பாடுகளை விசாரணை செய்ய குழு அமைப்பதுடன் போக்குவரத்து ஆணையரை உடனடியாக பணியிட மாறுதல் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றியத்தின் சார்பாக  கோரிக்கை வைக்கப்பட்டது.
 

மேலும் ஆணையரின் வினோத போக்கை கண்டித்தும்  பணியிட மாறுதல் செய்யும்படியும்  மாநிலம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து போக்குவரத்து துறை பணியாளர்கள் சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.
 

பத்து அம்ச கோரிக்கையை நிறைவேற்றி வரும் 24ஆம் தேதி அன்று ஒரு நாள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டமும் வருகின்ற 30 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும் என தெரிவித்தனர்.
 

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு குழு தலைவர் விஜயகுமார், போக்குவரத்து துறையின் அலுவலர்கள் அதிகாரிகள்  கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/