திருப்புளிங்குடி - நவ திருப்பதி கோவில் புஷ்பாஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 ஏப்ரல், 2024

திருப்புளிங்குடி - நவ திருப்பதி கோவில் புஷ்பாஞ்சலி.

ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 12.    நவதிருப்பதி கோவில்களில் 3 வது கோவில் திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோயிலாகும்.  

பங்குனி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு  நேற்று முன்தினம் புஷ்பாஞ்சலி சேவை நடந்தது. கடந்த மார்ச் 31 ந்தேதி  கொடியேற்றத்துடன் பங்குனி பிரம்மோற்சவம் துவங்கியது. 

நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு திருவாராதனம். பின்னர் 10.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை          திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி தலைமையில் சீனிவாசன், நரசிம்மன், பெரிய திருவடி. சடகோபன், அரவிந்தன் திருவேங்கடத்தான், ஆகியோர் சேவித்தனர். தீர்த்த கோஷ்டி நடந்தது. 

மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7.30 மணி தொடர்ந்து பலவகையான புஷ்பங்களால் துவாதச நாமம் சொல்லி அர்ச்சகர்கள் ரமேஷ்.கோபால கிருஷ்ணன், காசினி வேந்தன் ஆகியோர் அர்ச்சனை செய்தனர்.

இரவு 10 மணிக்கு புஷ்பாஞ்சலி நிறைவில் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி புஷ்பம் வழங்கப் பட்டது. இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், அறங்காவல்குழு உறுப்பினர்கள் அருணா தேவி, மாரியம்மாள், முருகன், முத்துகிருஷ்ணன்,  பாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/