இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் ஆ06, பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கோ. லஷ்மிபதி பல்வேறு இடங்களில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.


அதன்படி திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அத்துடன் அங்கு பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியினை பார்வையிட்டார். 


பின்னர் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடடுள்ள வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 


மேலும் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியில் உள்ள பணியாளர்கள் தங்களது வாக்குகளை தபால் முலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தை பார்வையிட்டார்.


பின்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடடுள்ள வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.


பின்னர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடடுள்ள வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையமான எட்டயபுரம் சி.கே.டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad