தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 6, உடன்குடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் கலீல் ரகுமான் என்பவர், வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக தனது வாகனத்தில் மக்களை கவரும் விதத்தில் வாசகங்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அதில் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, உணர்வு உள்ள யாரும் உரிமையை விற்க மாட்டார், எனது வாக்கு எனது உரிமை" என்ற உணர்ச்சி மிகுந்த வாசகங்களை தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி வைத்துள்ளார்.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இவரது இந்த வித்தியாசமான அணுகுமுறை பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக