தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல்.06, கொம்மடிகோட்டை ஶ்ரீ சங்கரா பகவதி ஆர்ட்ஸ் & அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுகள் என்ற திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாட்டில் மிகப் பழமை வாய்ந்த, பாரம்பரியமான உணவு வகைகளை கல்லூரி மாணவிகள் தயாரித்து காட்சி படுத்தி இருந்தனர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திசையன்விளையை சேர்ந்த சமூக சேவகரும், தொழிலதிபருமான லைசாள் எட்வர்ட் கலந்து கொண்டார், அவரை கல்லூரி நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் மாணவிகள் தயாரித்து வைத்திருந்த பாரம்பரிய உணவு பதார்த்தங்களை சுவைத்து மகிழ்ந்தார்.
அவர் பேசுகையில் பாரம்பரிய உணவுகளை மீண்டும் மக்கள் முன் கொண்டு வந்தது சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக