தூத்துக்குடி, ஏப்ரல் 09, பாராளுமன்ற தேர்தலில் தொகுதி எண் 214 - தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார் செய்யும் பணி (EVM Setting) ஆகியவை BEL நிறுவன பொறியாளர்களால் இன்று 9.4.24 தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதே போல தொகுதி எண் 215- திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார் செய்யும் பணி (EVM Setting) ஆகியவை BEL நிறுவன பொறியாளர்களால் இன்று 9.4.24 திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இவை அனைத்தையும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக