ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் மழலைச் செல்வங்களை முதல் நாள் வரவேற்கும் விதமாக மிக்கி மவுஸ் உடை அணிந்து ஆசிரியர்கள், பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்றனர் . - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஜூன், 2024

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் மழலைச் செல்வங்களை முதல் நாள் வரவேற்கும் விதமாக மிக்கி மவுஸ் உடை அணிந்து ஆசிரியர்கள், பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்றனர் .

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் மழலைச் செல்வங்களை முதல் நாள் வரவேற்கும் விதமாக மிக்கி மவுஸ் உடை அணிந்து ஆசிரியர்கள், பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்றனர் . 

ஆண்டிபட்டி, ஜூன். 13 -

   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் முதல் நாள் வகுப்பு தொடங்குவதை முன்னிட்டு எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் மிக்கி மவுஸ் உடை அணிந்து ஆடி பாடி பூங்கொத்து, இனிப்பு ,கேக்குகள், கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தும், பள்ளி நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தும், பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று மாணவர்களுக்கு பச்சை கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. பள்ளியின் செயலர் மத்தேயு ஜோயல் பெற்றோருடன் வந்த மழலைச் செல்வங்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

முதல்நாள் வகுப்பிற்கு பூங்கொத்துக்கள் மற்றும் கேக்குகளை கைகளில் ஏந்தி உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் சென்ற சின்னஞ்சிறு குழந்தைகளை பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். வித்தியாசமான இந்த வரவேற்பு நிகழ்ச்சி பெற்றோர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

செய்தியாளர். தவமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/