தாய் தம்பியை கொன்றுவிட்டு கடற்கரையில் பதுங்கியிருந்த கொலையாளி மகன் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

தாய் தம்பியை கொன்றுவிட்டு கடற்கரையில் பதுங்கியிருந்த கொலையாளி மகன் கைது.


சென்னை திருவொற்றியூர்  திருநகர் சேர்ந்த  பத்மா(45) அக்குபஞ்சர் மருத்துவரான இவர் தனது கணவர் முருகன் ஓமன் நாட்டில் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படிக்கும் மூத்த மகனான நித்திஷ், பத்தாம் வகுப்பு படித்து வரும்  இரண்டாவது மகனான சஞ்சய் என்பவரிடமும் வசித்து வந்துள்ளார். 


இந்த நிலையில் நித்திஷ் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது  பெரியம்மாவின் மகளான அக்காள் மகாலட்சுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பையில் செல்போன், வீட்டின் சாவி ஆகியவற்றை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.


இந்த நிலையில் நேற்று மகாலட்சுமி  நிதீஷ் இன் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் அவர் சில வாய்ஸ் மெசேஜ்களை வைத்துள்ளார், தனது அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்து விட்டதாக வாய்ஸ் மெசேஜ்  இருந்துள்ளது, தெரியவந்தது அடுத்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி தனது சித்தியான பத்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் உள்ளே சென்ற போது அங்கே பத்மாவின் உடலும் 14 வயதான  சஞ்சய்  உடலும் கொலை செய்யப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உடனடியாக இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கவே இரவு பணியில் இருந்த புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜ்  வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தனிப்படையினர் ரித்தீஷ்யை தீவிரமாக தேடி வந்தனர், குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உள்ள பழுதடைந்த படகில் போதையில் படுத்து உறங்கி இருப்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்த தனிப்படை  போலீசார் கைது செய்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.


நித்திஷ் எந்த காரணத்திற்காக தன் தாயையும் தம்பியையும் கொன்றார்  என போலீசார் விசாரணை நடத்தியதில் ஹரியர்ஸ்,  வேலைக்கு செல்ல முடியவில்லை, அம்மா,  அப்பா கஷ்டப்பட்டு உழைத்த போதிலும்  வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் குடும்ப பாரத்தை தாங்க முடியாத மனவருத்ததில் இருந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக  வீட்டை விட்டு வெளியேறிய மீண்டும் வீட்டிற்கு வந்து மன உளைச்சலில் இருந்த நிலையில் தாய் தூங்கி கொண்டிருக்கும் போதே காய்கறி அரியும் சிறிய கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும், அந்த சத்தம் கேட்டு வந்த தம்பியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள இருந்ததாகவும், 1 மணி நேரம் அங்கு காத்திருந்து விட்டு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளாமல் திரும்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/