சென்னை திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் இளைஞர் கவின் சித்தார்த் (19) இவர் நேற்று தனது நண்பர்களோடு சேர்ந்து தண்டையார்பேட்டை வ உ சி நகர் பகுதியில் நீச்சல் குளத்திற்கு சென்றுள்ளார், பின்னர் அங்கிருந்து அருகாமையில் இருக்கக்கூடிய வ உ சி நகர் ரயில்வே யார்டுக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
கவின் சித்தார்த் கூட்ஸ் ரயிலில் பெட்ரோல் டேங்க் ஏணியின் மீது ஏறும்பொழுது மின்சார கம்பி உரசி தூக்கி வீசப்பட்ட சித்தார்த் பரிதாபமாக சமபவ இடத்திலேயே உயிரிழந்தார், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக