சென்னை கொளத்தூரில் ஒன்பது ரூபாய்க்கு மூன்று ஆடைகள் மற்றும் சப்பல் கொடுப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்த கடையின் முன்பு குவிந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்கள் மீது போலீசார் தடியடி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஜூன், 2024

சென்னை கொளத்தூரில் ஒன்பது ரூபாய்க்கு மூன்று ஆடைகள் மற்றும் சப்பல் கொடுப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்த கடையின் முன்பு குவிந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்கள் மீது போலீசார் தடியடி.


சென்னை கொளத்தூர் பகுதியில் ரெட் சீட் என்ற கடை இன்று திறக்கப்பட இருந்த நிலையில் கடையின் திறப்பு விழா அன்று ஒன்பது ரூபாய்க்கு மூன்று ஆடைகள் மற்றும் செருப்பு போன்றவை அழிக்கப்படுவதாக instagram-ல் நிறுவனத்தின் சார்பில் விளம்பரம்செய்யப்பட்டது. 


இந்த விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கடை திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது இதன் காரணமாக காலை 5 மணி முதல் அப்பகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்துள்ளனர் 


இந்த நிலையில் பகுஜன் சமாஜ் வாட்ச்  கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடையை திறந்து வைத்தார், அதன் பின்பும் இன்ஸ்டாகிராமில் அறிவிக்கப்பட்ட எந்த ஒரு ஆப் வரும் மக்களுக்கு அளிக்கப்படாத நிலையில் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கடையின் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் அப்பொழுது அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது இதனால் அப்பகுதிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர் அப்பொழுது திடீரென பொதுமக்கள் ஆத்திரம் அடைந்ததால் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது திடீரென போலீசருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இது ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பாக மாற பொதுமக்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர் இதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் இளைஞர்கள் கடையில் முன்பு நின்ற அனைவர் மீதும் போலீசார் சரா மாறியாக தடியடி நடத்தியதில் பலர் காயமுற்றனர் இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


இதனை செய்தி சேகரிக்க சென்று செய்தியாளர்களையும் காவல்துறையினர் அடையாள அட்டைகளை பிடுங்கிக் கொண்டு செய்தி சேகரிக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தனர் இதனால் செய்தியாளர்களுக்கும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் கொளத்தூர் பகுதியில் மிகுந்த பதட்டமான சூழல் நிலவியது, கடை திறப்பு விழாவன்று பொதுமக்களுக்கு ஆஃபர் கொடுப்பதாக கூறி பொதுமக்களை கூட்டம் சேர்த்து கடைக்கு விளம்பரம் தேடிக் கொண்ட கடை உரிமையாளர் மீதும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/