இலவச ரீசார்ஜ்- பொதுமக்கள் ஏமாறாதீர்கள் போலீஸ் எச்சரிக்கை.
3 மாத இலவச ரீசார்ஜ் போலி மக்கள் ஏமாறவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நாடுமுழுவதும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு 3மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
அதில் வரும் ஒரு லிங்க்கை நீங்கள் தொட்டால் உடனை உங்களுடைய மொபைல் எண்ணை கேட்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் போலியான விளம்பரத்தை நம்பி லிங்க்கை கிளிக் செய்து உங்கள் வங்கியில் உள்ள பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக