துபாயில் பாமக-பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

துபாயில் பாமக-பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்.


துபாய் ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ்நாட்டின் அரசியல் மிகப்பெரிய  காட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத்தாயகம் சர்வதேச அமைப்பின்  காலநிலை செயல்பாட்டுக்கான வெளிநாடு வாழ் தமிழர்கள் இயக்கம் சார்பில்  அமீரக துபாயில் உள்ள ஏர்போர்ட் மில்லினியம் நட்சித்திர ஹோட்டலில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்  பசுமை போராளி மருத்துவர் இராமதாசு அய்யா தலைமையில் கண்ணன் ரவி குழும  நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ரவி மற்றும் KRG நிறுவன இயக்குனர் தீபக் கண்ணன் ரவி  முன்னிலையில் ஆர்ஜே அஞ்சனா விக்னேஷ் தொகுத்து வழங்க  சிறப்பாக  நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டில் இருந்து வருகை புரிந்த பசுமைத் தாயகம் மாநில செயலாளர் அருள் இரத்தினம், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில செயலாளர் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மேலும் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், தமிழக குரல் தொலைக்காட்சி தமிழக குரல் நாளிதழ் முதன்மை நெறியாளர் kamalkvl, UTS ரமேஷ் விஸ்வநாதன், லைன் கிளப் ரமாமலர்,  சாமியுக்த பவன் நிறுவனர் ராமமூர்த்தி, தினகுரல்தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, மதிமுக அமீரக நிர்வாகி துரை, அதிமுக அமீரக நிர்வாகி ரவி உள்ளிட்டோர் மற்றும்  அமீரகத்திலுள்ள பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் அமீரக பசுமைத் தாயக செயற்பாட்டாளர்கள்  அழகாபுரம் இரா. தங்கதுரை, மகேஷ் காமராஜ், பிரதீப் குமார், சதீஷ் குமார், மாளிகைக் கோட்டம் செல்வராஜ், வாகையூர் ராஜா  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad