தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலை அமைந்துள்ள சீனிவாசா கேப்பாரு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திருப்பத்தூர் நகர திமுகவினர் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ரகுநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகர மன்ற துணைத் தலைவர் சபியுள்ளா, நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஷ் , நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், அரவிந்தன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுபாஷ் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் நகர துணை செயலாளர் செல்வம், தமிழரசி இளங்கோவன், நகரமன்ற உறுப்பினர்கள், சுகுணா ரமேஷ், பிரேம்குமார், செல்வி, ரமணன் மற்றும்.கோபி. நதிம். சரவணன், பெருமாள். ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகளை கொடுத்து துணை முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக