வாணியம்பாடி அருகே காரில் கடத்திவரப்பட்ட 360 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

வாணியம்பாடி அருகே காரில் கடத்திவரப்பட்ட 360 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது.


வாணியம்பாடி அருகே காரில் கடத்திவரப்பட்ட 360 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது. 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடி பகுதியில்   முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் விபத்தில் சேதமடைந்த கார் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட காரை துரத்தி சென்றுள்ளார்.


இதில் விபத்தை ஏற்படுத்தி முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீஸார் விபத்துக்குள்ளானது கார் சோதனை மேற்கொண்ட போது காரில் 24 மூட்டைகளில் 360 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடித்தனர்.


இதனை தொடர்ந்து காரில் வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த நர்சாராம் என்பவரை கைது செய்து ஹான்ஸ், குட்கா பொருட்கள் எங்கிருந்து யாருக்காக கடத்திச் சொல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad