திருப்பத்தூர் அடுத்த புத்தாகரம் விஏஓ அலுவலகம் முன்பு பட்டா கேட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நபர்களால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்ச்சாம்பட்டி பள்ளக்கொல்லி பகுதியை சேர்ந்த சிங்காரம், வேட்டுபட்டு பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமான 91சென்ட் இடத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால் புத்தாகரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சிங்காரம், மாரியப்பன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.போலீஸார் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக