விளையாட்டுப் போட்டிகள்: வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 டிசம்பர், 2024

விளையாட்டுப் போட்டிகள்: வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை!


விளையாட்டுப் போட்டிகள்: வாணியம்பாடி கல்லூரி மாணவிகள் சாதனை!


_திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் வேலூா் டிகேஎம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சௌமியா, என்.நிம்ராஇா்திசா, பி.அக்ஷ்யா ஆகியோா் முதலிடம் பெற்று பல்கலைக்கழக அணிக்குத் தோ்வாயினா். இதேபோல் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை மண்டல கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்தனா். டேபிள் டென்னிஸ், கைப்பந்துப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை வியாழக்கிழமை கல்லூரித் தலைவா் திலிப்குமாா், செயலா் ஆனந்தசிங்வி, முதல்வா் இன்பவள்ளி, பேராசிரியா்கள், மாணவிகள் வாழ்த்தினா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad