அவ்வகையில் இவ்வருடத்திற்கான விழாவிற்கு ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் திரு.ஹமீது யாசின் அவர்கள் சிறந்த சமூக சேவகருக்கான சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் ஈமான் அமைப்பை பற்றியும், அதன் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார், மேலும் வருங்காலங்களில் NPCT அமைப்பின் நற்காரியங்களில் ஈமான் அமைப்பும் கலந்துகொண்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார்.
அவருக்கு NPCTயின் 2024 சமூக சேவகர் என்ற விருதையும், அவருடன் அமீரகத்தில் சிறப்பாக சமூக சேவை செயலாற்றும் திருமதி.உமா சங்கரி அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக அமீரகத்தில் வசிக்கும் இரண்டு தனித்திறன் ஆட்டிசம் குழந்தைகளை திரு.ரோஹித், திரு.பரத் ராம் அவர்களை அழைத்து, இவ்வருடத்திற்கான NPCTயின் விருதுகளை வழங்க செய்து கௌரவித்தது புதுமையாகவும், அக்குழந்தைகளுக்கு சிறப்பு அங்கிகாரத்தையும் வழங்கியது அனைவரின் பாராட்டையும், நல்மதிப்பையும் பெற்றது.
இவ்விழாவை NPCTயின் மூத்த நிர்வாகிகள் நைஸ்வின், மணி சுப்புராயன், VM பிரபு, அறிவழகன், ஹாஜி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், வந்திருந்தவர்களுக்கு விருதுகளும், இரவு விருந்தும் வழங்கி இனிதே விழா நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக