கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 டிசம்பர், 2024

கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.


இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள், இந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்மஸ் பண்டிகை விமர்சையாக கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.


கடலூரில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும்  வீடுகளிலும் வண்ண மின்விளக்கு ஆல் அலங்கரித்து விதவித நட்சத்திரங்கள் பலூன்கள் தொங்கவிட்டு இருந்தனர் இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் கிறிஸ்மஸ் குடில்களும் அமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.


கடலூர் மஞ்சக்குப்பம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்  அருள் தந்தை வின்சென்ட், அருள் தந்தை பால், அருள் தந்தை தெரஸ் நாதன் , வில்சன் ஜார்ஜ் தலைமையில் நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு திருப்பலி வெகு சிறப்பாக நடைபெற்றது, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட குடிலில் ஏசுநாதர் பிறப்பை விளக்கும் வகையில் பங்குத்தந்தை  இயேசு சுருபத்தை குடிலில் வைத்தார் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 


புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதே போன்று கடலூர் நகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad