புதுச்சத்திரம் அருகே கடற்கரைக்கு வந்த பெண்கள் உள்ளிட்டோரை தாக்கிய மது போதையில் இருந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 டிசம்பர், 2024

புதுச்சத்திரம் அருகே கடற்கரைக்கு வந்த பெண்கள் உள்ளிட்டோரை தாக்கிய மது போதையில் இருந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டை பகுதியைச் சார்ந்த நபர்கள் பெண்களுடன் புது சத்திரம் அருகே உள்ள பெரிய குப்பம் கடற்கரை பகுதிக்கு பொழுதுபோக்கிற்கு வந்தனர். அப்பொழுது அங்கு வந்த மதுபோதையில் இருந்த தியாகவல்லி  பகுதியைச் சார்ந்த சிலர் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்கினர். 


மேலும் அவர்களுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கிய நிலையில் இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இது குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad