இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், சயனபுரம் ஊராட்சிக்குட்பட்ட வடகண்டிகை கிராமத்தில் செயல்பட்டு வரும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக்கட்டிடம், புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது, இக்கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர்.பவானி வடிவேலு அவர்கள் தலைமை தாங்கினார், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார், இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் .விமலா, ஊராட்சி மன்ற உறுப்பினர், .பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் .எம்.பி.பாபு, ஊராட்சி செயலாளர், .சாரங்கன், பழனி, பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
- செய்தியாளர் மு.பிரகாசம். நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக