ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி வட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அவர்கள் நெமிலி ஊராட்சி ஒன்றியம், அசநெல்லிக் குப்பம் ஊராட்சியில் மாதங்கி டெக்ஸ்டைஸ் பிரைவேட் லிமிடெட் & நண்டு பிராண்ட் லுங்கி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப.. மாதங்கி டெக்ஸ்டைஸ் பிரைவேட் லிமிடெட் & நண்டு பிராண்ட் லுங்கி நிறுவனர் கடிகாசலம், ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு மற்றும் பெருமாள், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.இரவீந்திரன், எஸ். ஜி. சி.பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.முரளி திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக