திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை மரணம் வழக்குகளை எவ்வாறு கையாண்டு புலன் விசாரணை செய்ய புத்தாக்க பயிற்சி.
வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்கொலை மரணம் வழக்குகளை எவ்வாறு கையாண்டு, புலன் விசாரணை குறித்து புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்தார்.
இதில் மாவட்டத்தில் உள்ள உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியிருக்கு தற்கொலை மரணம் வழக்குகளை எவ்வாறு கையாண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் குறித்து வேலூர் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் (ஓய்வு) பாரி மற்றும் வேலூர் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் முனைவர் சொக்கநாதன் ஆகியோர் புத்தாக்க பயிற்சி வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர்,வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக