அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வெல்ஃபேர் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வெல்ஃபேர் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வெல்ஃபேர் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மண்டல பேச்சாளர் பைசான் சாதிப், வெல்ஃபேர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கண்டன உரை எழுப்பியபோது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க  வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, "இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில்  பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் அனைவரும் போராட வேண்டும். இந்நிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெல்ஃபேர் கட்சியின் நகர தலைவர் முகமது அஸ்கர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் அப்ரார், எஸ் டி பி ஐ நகரத் தலைவர் சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மண்டல செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல் அமர்நாத், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் எ.ஜெ.சக்தி, ஓவியர் அண்ணாமலை, ஒன்றிய அமைப்பாளர், திருமா இரவுப் பள்ளி  சி.திருமாவிமல், நகர இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் விக்கி, ஒன்றிய இளஞ்சிறுத்தை அமைப்பாளர் இரா.விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெல்ஃபேர் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,  எஸ் டி பி ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன உரைகளை தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad