தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர்  தலைமை வகித்தார்,மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். 


இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சசிக்குமார், மாநில பொதுச் செயலாளர் குமார், மாநில பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


கூட்டத்தில் மாநில பொருளாளர் தியாகராஜன், மாநில துணை தலைவர் ஜான்போஸ்கோ மாநில செயலாளர்கள், புஷ்பகாந்தன், உதய சூரியன், கடலூர் மாவட்ட துணைத் தலைவர் சிதம்பர பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட அமைப்பு செயலாளர் - திருவேங்கடம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad