திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது.


திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது.



அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர் -  சாலையில் அமர்ந்து, தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் குண்டு கட்டாக தூக்கி போலீசார் அவர்களை கைது செய்ததால் பரபரப்பு.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் , தமிழக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , சாலையில் அமர்ந்து அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியதால் போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அரசு பேருந்துகளில் ஏற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
         

மேலும் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் - க்கும், போலீசாருக்கும் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு 30 நிமிடங்களாக தொடர்ந்ததால் போராட்டம் முடிவடைய ஒரு மணி நேரம் ஆன நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad