கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது
தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் ஆணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சிய தலைவர் உத்தரவின்படி சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் மற்றும் அடிக்கடி விடுப்பெடுக்கும் மாணவ மாணவிகளை கண்டறிந்து இன்று (30/12/2024) ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனா_காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு செல்லாத மாணவியை அழைத்து தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்
இதில் கலந்து கொண்ட ஊராட்சி செயலர் திருமாள்வளவன் மற்றும் ஆசிரியர் பாலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு தலைவி ஆகியோர்கள் முன்னிலையில் காலை11 மணியளவில் பெற்றோர்களை வரவைத்து இடையில் நின்ற மாணவ மாணவிகளின் பிரச்சனைகளையும் கலந்து ஆலோசித்து தொடர்ந்து பள்ளிக்கு வருமாறும் அடிக்கடி விடுப்பு எடுக்காத வாறும் கல்வி பயில ஆலோசனை வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக