பொதக்குடி UAE ஜமாஅத் சார்பாக கடந்த (02 Dec 2024) திங்கள் கிழமை அன்று நடத்திய 53வது அமீரக தேசிய தின ஒன்றுக்கூடல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பொதக்குடி UAE ஜமாஅத் சார்பாக கடந்த (02 Dec 2024) திங்கள் கிழமை அன்று நடத்திய 53வது அமீரக தேசிய தின ஒன்றுக்கூடல்.


பொதக்குடி UAE ஜமாஅத் சார்பாக நேற்று (02 Dec 2024) திங்கள் கிழமை அன்று நடத்திய 53 வது அமீரக தேசிய தின ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது.


இதுகுறித்து பொதக்குடி UAE ஜமாஅத் நிர்வாகிகள் கூறுகையில், பொதக்குடி UAE ஜமாத் சார்பாக கடந்த 02 Dec 2024 திங்கள் கிழமை அன்று நடத்திய 53வது அமீரக தேசிய தின ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. 200க்கும் மேற்பட்ட பொதக்குடி உறவுகள் குடும்பத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் குழந்தைகளின் குதூகலம், தாய்மார்கள் கலந்து கொண்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், அடுத்த தலைமுறையை வழிநடத்தக்கூடிய இளைஞர்களுக்கான  போட்டிகள் என்று அனைவரையும் கொண்டாட வைத்து உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.


சுவையான மதிய உணவு, மாலையில்  சூடான தேனீர் என வந்தவர்களை மகிழ்விக்கக்கூடிய சிறப்பான ஏற்பாடுகளை நமது பொதக்குடி UAE ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவருக்கும் பலதரப்பட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நமதூர் சொந்தங்கள், பொருளாதார பங்களிப்பு வழங்கிய நமதூர் சகோதரர்கள், கிளப் நண்பர்கள், மற்றும் களப்பணியாற்றிய சகோதரர்கள் அனைவர்களுக்கும் அமீரக ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும், சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad