அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த 53வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 டிசம்பர், 2024

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த 53வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்.


அபுதாபி கே.எஃப்.சி. பூங்காவில் அய்மான் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 53வது தேசிய தின விழா நாள் 02-12-2024 அன்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி அமீரக தேசிய கீதத்துடன் தொடங்கியது. அமீரகம் நமக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல  வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த தேசிய தின விழா கொண்டாட்டத்தை வருடந்தோறும் அய்மான் சங்கத்தின் மூலம் கொண்டாடிவருகின்றனர். 


இந்த விழாவிற்க்கு அய்மான் சங்க தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முஹம்மது ஜமாலுதீன் தலைமை தாங்கினார்.  பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர்கள் கீழக்கரை ஷேக் பரீது, காதர் மீரான் பைஜி, ஆவை முகம்மது அன்சாரி, மதுக்கூர் அப்துல்லாஹ்  அவர்கள் முன்னிலை வகித்தார். அய்மான் சங்கம் செய்து வரும் சமூக சேவை பணிகளை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.


வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் காயல் ரிஃபாய், மார்க்கத்துறை செயலாளர்  ஹுசைன் மக்கி ஆலிம் மஹழரி, துணை தலைவர் காதர் மீரான் பைஜி, பைத்துல் மால் பொதுச்செயலாளர்  பார்த்திபனூர் நிஜாமைதீன், பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா, விழா குழு செயலாளர்  லெப்பை தம்பி,  செயற்குழு உறுப்பினர்கள்  கட்டுமாவடி தஸ்தகிர் இப்ராகிம், அம்பகரத்தூர் முஹம்மது கைசர், கீழக்கரை அஜ்மல் தாஹிர்,  சையீத் பாசில், நெல்லை முஹம்மது ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் நடத்தினர்.


விழாவில் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவக்குமார், ஹோப் அமைப்பின் நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலர் கவ்ஸர் பைக், தொப்பி வாப்பா  உணவகத்தின் நிறுவனர் உமர் முக்தார், கிங் கார்கோ நிறுவனர், அமீரக காயிதே மில்லத் பேரவயின் துணை பொதுச் செயலாளர் பரக்கத் அலி, துபாய் மண்டல தலைவர் காமில், அவனிர் திருமதி உமா புகழேந்தி, தஞ்சை உணவகத்தின் நிறுவனர் திருமதி நதியா, LLH மருத்துவமனையின் சார்பில்  அப்துல் சலீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு புனித உம்ரா சென்று வர கூப்பன் அல் அமீன் உம்ரா நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.  மற்றும் 43 இன்ச் LED டிவி உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருள்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது. பெண்களுக்கு தனி இட வசதிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் LLH மருத்துவமனை சார்பில்  இலவச மருத்துவ முகாமும்  செய்யப்பட்டிருந்தது.


நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அய்மானுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வரும் நன்கொடையாளர்கள் உள்ளிட்டோருக்கும் அய்மான் சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad