திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 டிசம்பர், 2024

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.


தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் முன்வைத்த கோரிக்கைகள் நில அளவை இயக்கத்தாலும், அரசாலும் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருவதாகவும் இது தொடர்பாக களப்பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க கடந்த 24. 11. 2024 தேதி அன்று நாமக்கல்லில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவின் படி மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அதில்  முதற்கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. 


இந்த நிலையில் முதற்கட்ட போராட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும் எனவும், சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணி சுமையை சுமத்துவதையும் நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கின்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிடக் கோரியும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதிவினை பெற்று தகுதியுள்ள நில அளவையர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், ஆய்வாளர் துணை ஆய்வாளர், ஊதிய முரண்பாட்டை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நில அளவை களப்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad