அதனைத் தொடர்ந்து சுமார் 150 ஆண்டு காலமாக சுடுகாடு பிரச்சனை இருந்து வந்துள்ளது, இதற்கு நிரந்தர தீர்வு காண எண்ணிய அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் என இருதரப்பினரிடமும் பேசி சமரசத்தை ஏற்படுத்தினார் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் அருணா குப்புசாமியிடம் பேசி அவருடைய சொந்த பணம் சுமார் 50 லட்சம் மதிப்பில் அந்த இடத்தினை வாங்கி நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் பதிவு செய்து அதற்கான ஆவணங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலையில் ஒப்படைத்தார்.
மேலும் இந்த சுடுகாட்டிற்கு தேவையான சுற்றுச்சுவர், கேட்,பேவர் பிளாக் பாதை, எரிமேடை, தண்ணீர் வசதி, மின்விளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அருணா குப்புசாமி மனுவையும் அளித்தார். இதன் காரணமாக 150 ஆண்டுகளாக நீடித்து வந்த சுடுகாடு பிரச்சனையை ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்து வைத்ததன் காரணமாக ஊர் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக