ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும்ஃபெஞ்சல் புயல் மழையின் காரணமாக,சித்தூர் கிராமத்தில் வசித்து வரும், இருளர் இனத்தைச் சார்ந்த 9 குடும்பங்களை வெள்ள நீர் சூழ்ந்தது, இதனால் 23 நபர்களை, சித்தூர் ஊராட்சியின் கிராம சேவை மையக் கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு உணவு, படுக்க பாய், பெட்ஷிட், ஆகியவற்றை வழங்கி நலம் விசாரித்தார், இந்த நிகழ்வில் அரக்கோணம் கோட்டாட்சியர், அரக்கோணம் தாசில்தார், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்!
செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக