இப்போட்டி சேந்தமங்கலத்தில் தொடங்கி, சயனபுரம் வழியாக நெமிலி பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை, 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத்காந்தி அவர்கள் காலை 8.00 மணிக்கு துவக்கி வைத்தார்! பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்!
இப்போட்டியில், நெமிலி விவேகானந்தா பள்ளியின் சார்பில் சுமார் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய காரணத்தினால் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே நெமிலி ஒன்றிய பெருந்தலைவரும், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், பெ.வடிவேலு மற்றும் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று, கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டி, சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி, வாழ்த்தி பேசினர்!
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர். வேதையா, ஆசிரியர் இன்பா மற்றும் ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக