பேருந்தில் தவறவிட்ட 5 பவுன் தங்க ஆபரணங்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

பேருந்தில் தவறவிட்ட 5 பவுன் தங்க ஆபரணங்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த யாஷிகாபானு என்பவர் தனது தாய் வீடான திண்டுக்கல் சென்று விட்டு திருச்சியிலிருந்து அரசு பேருந்தில் ஏறி அதிகாலை சுமார் 3.45 மணிக்கு தான் கொண்டு வந்த கைப்பையை எடுக்காமல் பேருந்திலிருந்து வடலூரில் இறங்கி  வீட்டுக்கு சென்றார். 


வீட்டுக்கு சென்று பார்த்தபோது தான் கொண்டுவந்த கைப்பையிலிருந்த 5.1/2 பவுன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் வடலூர் அரசு பேருந்து பணிமனைக்கு சென்று விசாரித்ததில் மேற்படி பேருந்திலிருந்த வடலூரில் யாரும் இறங்க வில்லை எனவும், குறிஞ்சிப்பாடியில்தான் 10 நபர்கள் பேருந்திலிந்து இறங்கியதாக கிடைத்த தகவலை அடுத்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதே பேருந்தில் பயணம் செய்த குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கௌசல்யா  என்பவர் பேருந்தில் நகையுடன் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் நகைகள் இருந்ததை கண்டு நேராக குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் வந்து ஒப்படைத்தார். 


பின்னர் காவல் துறையினர் நகையை தொலைத்ததாக புகார் அளித்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர் யாஷிகாபானு மற்றும் அவரது கணவர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் வந்து புகார் அளித்த நிலையில்  காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி நயையுடன் கூடிய பையை தொலைத்தது யாஷிகாபானுதான் என்பதை உறுதிசெய்து கொண்டு, காவல் நிலையத்தில் நகை பையை ஒப்படைத்த கௌசல்யா அவர்களை வர வைத்து, அவரது முன்னிலையில் 51/2 பவுன் நகையை யாஷிகா பானுவிடம் நேரில் ஒப்படைத்தார்கள். கெளசல்யா நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜதாமர பாண்டியன் மற்றும் காவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad