திருமதி.சாந்தா ஷீலா நாயர் இ.அ.ப (ஓய்வு ) அவர்களுக்கு "முனைவர் வர்கீஸ் கொரியன் நீடித்த நிலையான வளர்ச்சி விருது" வழங்கி கௌரவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

திருமதி.சாந்தா ஷீலா நாயர் இ.அ.ப (ஓய்வு ) அவர்களுக்கு "முனைவர் வர்கீஸ் கொரியன் நீடித்த நிலையான வளர்ச்சி விருது" வழங்கி கௌரவிப்பு.


இந்திய வெண்மை புரட்சியின் தந்தையாக கருதும் முனைவர் வர்கிஸ் கொரியன் அவர்களின் பிறந்த நாளான 26/11/2024 அன்று 'தேசிய பால்வள' நாளாக கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக "நிலையான பால் வளம்" குறித்து கருத்தரங்கு ஒன்று சென்னை, ஐஐடி மெட்ராஸ் இல் நடைபெற்றது. அவ்வமயம் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு அரும் பணி ஆற்றிய திருமதி  சாந்தா ஷீலா நாயர் இ அ ப (ஓய்வு) அவர்களுக்கு UNDP என் அங்கமான SKPCL இன் உயரிய விருதான "முனைவர் வர்கீஸ் கொரியன் நீடித்த நிலையான வளர்ச்சி விருது" வழங்கி கௌரவித்தது.


இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், துறை வல்லுனர்கள், அரசு அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள், பங்கேற்றனர். முனைவர் ராஜரத்தினம் MD, UNDP project SKPCL வரவேற்று பேசும் போது திரு வர்கீஸ் குரியன் ஆற்றிய பணிகளையும், பால்வளத் துறையின் தற்போதைய வளர்ச்சி பற்றியும் விளக்கினார். திருமதி சாந்தா சீலா நாயர் அவர்கள் தலைமை தாங்கினார், மேற்படி கருத்தரங்கில் நீடித்த நிலையான பால் வளத்தினை பெருக்கல் பற்றி கலந்தாலோசிக்கப் பட்டு கீழ்காணும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


கால்நடை விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் வகையில் கால்நடையின் சாணியினை குறைந்தது 50 சதவீத அளவில் முறையாக மாற்றம் செய்து முறைசாரா எரிபொருளாக (Bio-gas) மாற்றி விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும். விலையில்லா பொருளாக கருதப்படும் சாணியை வருவாய் ஈட்டும் செல்வமாக மாற்றப்பட வேண்டும். கால்நடையின்  சிறுநீர் கிருமி நாசினியாக பயன்படுத்த பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


பால்வளப் பணிகளை இயற்கைக்கு உகந்து மனிதநேயத்துடன் கையாள வேண்டும். தற்போது பால் உற்பத்தி அதிக அளவு இருப்பதால் அதனை மதிப்புக்கு கூட்டி பால் பொருட்களாக மாற்றி வருவாய் பெருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீடித்த நிலையான பால் வளத்திற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இயற்கையோடு இயந்த ஏய்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad