உளுந்தூர்பேட்டை மணிகூண்டு திடலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொது கூட்டம் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளரா கழக செய்தி தொடர்பாளர் ஜெமிலா, மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் ஆட்சி களத்தில் மக்களுக்கு செய்த நன்மைகளை சிறப்புரையாக பேசினார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.மணிராஜ், அதையூர் சுப்பராயன், செண்பகவேல் ஏகாம்பரம், சந்திரசேகரன், நகர கழக செயலாளர் துரை, மாவட்ட அவைத்தலைவர் பரமாத்மா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாக்யராஜ்,வார்டு கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டம் நகரம் ஒன்றியம் கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக