ஆம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள், ரூ 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் ரஃகிபூர் ரஹ்மான். இவர் காலனி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த பீரோ கதவுகளை திறந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை அவருடைய வீட்டின் அருகில் உள்ளவர்கள் வீடு திறந்து இருப்பதை அறிந்து நகர பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆம்பூர் நகர காவல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக