ஓம் சக்தி பக்தர்கள் பேருந்தில் ஆட்டம் பாட்டம் மலை பகுதியில் நிலைத்தடுமாறி கவிழ்நத பேருந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

ஓம் சக்தி பக்தர்கள் பேருந்தில் ஆட்டம் பாட்டம் மலை பகுதியில் நிலைத்தடுமாறி கவிழ்நத பேருந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் போலீசார் விசாரணை!

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் மேல்மருவத்தூர் ஓம் சக்தி பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து.

பேரணாம்பட்டு ,8 -

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகா, பத்தலபள்ளி வழியாக கர்நாடகா செல்லும் சாலையில், கர்நாடகா மாநிலம் கோலார் அடுத்த முதுவடி பகுதியிலிருந்து 50 பேரை ஏற்றி வந்த தனியார் பேருந்து மலை பாதையில் சென்று கொண்டிருந்தபோது பக்தர்கள், ஓம் சக்தி.. ஓம் சக்தி.. என கோசமிட்டு ஆட்டம் பாட்டத்தில் பேருந்து அலுங்கி குலுங்கி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு  பேரணாம்பட்டு திமுக நகர கழக செயலாளரும் மற்றும் நகர மன்ற துணைத் தலைவருமான அலியார் ஜுபேர் அஹ்மத் நேரில் வந்து காயமடைந்த மேல்மருவத்தூர் ஓம் சக்தி பக்தர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அரசு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார், அவருடன் திமுக 4 வது வார்டு செயலாளர் அப்துல் பாசித் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad